Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வரைபடம் போல் காட்சியளிக்கும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம்

வரைபடம் போல் காட்சியளிக்கும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம்

வரைபடம் போல் காட்சியளிக்கும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம்

வரைபடம் போல் காட்சியளிக்கும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம்

ADDED : ஜூன் 24, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
செம்மஞ்சேரி: ஓ.எம்.ஆர்., குமரன் நகர் சந்திப்பில் இருந்து, 80 அடி அகல நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை செல்கிறது.

ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால், நாவலுாரில் இருந்து சோழிங்கநல்லுார் வழியாக மேடவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், இந்த இணைப்பு சாலை வழியாக செல்கின்றன. இதனால், 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமுள்ள சாலையாக மாறியது.

மேலும், குடிநீர் லாரிகள் அதிகம் செல்கின்றன. மெட்ரோ ரயில் பணிக்கான பணிமனை இந்த சாலையில் உள்ளதால், 32, 40 சக்கர கனரக லாரிகள் செல்கின்றன.

எட்டு ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டது. இலகுரக வாகனங்கள் சென்ற நிலையில், ஓராண்டாக கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இதனால், சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நிலைதடுமாறுகின்றன. ஒவ்வொரு கனமழையின் போதும், இச்சாலையில் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை, மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால், சாலையில் விரிசல் மேலும் அதிகரித்து வருகிறது. தற்போது, சாலையின் ஒரு பக்கம் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்படுகிறது.

அடுத்து, செம்மஞ்சேரி கால்வாயில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை, மூடு கால்வாய் அமைக்கவும் திட்டமிடப்பட்டதால், சாலையின் சேதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.

எனவே, முக்கிய இணைப்பு சாலையாக உள்ளதால், சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us