/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சோகண்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு சோகண்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு
சோகண்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு
சோகண்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு
சோகண்டி அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு
ADDED : மார் 13, 2025 10:29 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்குகிறது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க, பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன், அரசு உயர்நிலைப் பள்ளி துவக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, உயர்நிலைப்பள்ளிக்காக ஒதுக்கிய இடத்தில், பொதுமக்களும் வீடு கட்டி வசித்த நிலையில், பள்ளி இடம் குறித்து சர்ச்சையும் ஏற்பட்டது.
இட சிக்கல் காரணமாக, தொடக்கப்பள்ளி வளாகத்தில், உயர்நிலைப்பள்ளி, இடநெருக்கடியில் இயங்கியது. பின்னர், பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கப்பட்டு, வகுப்பறை கட்டடம் கட்ட வலியுறுத்தப்பட்டது.
திருப்போரூர் தொகுதி மேம்பாட்டு நிதியில், இரண்டு வகுப்பறைகள் கட்ட, 2021- -22ல் 28 லட்சம் ரூபாய், 2022 - 23ல் இரண்டு வகுப்பறைகள் கட்ட, 46.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, நேற்று இந்த புதிய கட்டடங்களை திறந்து, மாணவ - மாணவியர் கல்வியில் சிறக்க வாழ்த்தினார்.