/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையில் பைப் லைன் உடைந்து வீணாகும் குடிநீர் நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையில் பைப் லைன் உடைந்து வீணாகும் குடிநீர்
நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையில் பைப் லைன் உடைந்து வீணாகும் குடிநீர்
நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையில் பைப் லைன் உடைந்து வீணாகும் குடிநீர்
நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையில் பைப் லைன் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஜூலை 28, 2024 11:41 PM
கூடுவாஞ்சேரி : நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையில், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப்லைன் உடைந்து, குடிநீர் வீணாகிறது. அதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் தேங்கிய நீரால் சறுக்கி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலை, கூடுவாஞ்சேரி சிக்னலில் இருந்து, பெருமாட்டுநல்லுார் வழியாக, திருப்போரூர், மாமல்லபுரம் வரை செல்கிறது. இந்த சாலை, நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அதேபோல், மாமல்லபுரம், திருப்போரூரில் இருந்து, காயரம்பேடு வழியாக, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, தாம்பரத்திற்கு அதிகமான வாகனங்கள் செல்கின்றன.
சில நாட்களாக, இந்த சாலையில். மாடுகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. மேலும், பெருமாட்டுநல்லுாரில் இருந்து, நந்திவரம் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிக்கு, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய், இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பைப் லைன் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால், இருசக்கர வாகனங்களில் வருவோர் சறுக்கி விழுந்து, அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். அதேபோல், சாலையில் உலவும் மாடுகளுளாலும், விபத்துகள் அதிகரித்துள்ளன.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், சேதமாகி உள்ள குடிநீர் பைப் லைனை சீரமைக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.