/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பேரூராட்சி ஆபீஸ் மேம்பாடு மாமல்லையில் நிதி வீணடிப்பு பேரூராட்சி ஆபீஸ் மேம்பாடு மாமல்லையில் நிதி வீணடிப்பு
பேரூராட்சி ஆபீஸ் மேம்பாடு மாமல்லையில் நிதி வீணடிப்பு
பேரூராட்சி ஆபீஸ் மேம்பாடு மாமல்லையில் நிதி வீணடிப்பு
பேரூராட்சி ஆபீஸ் மேம்பாடு மாமல்லையில் நிதி வீணடிப்பு
ADDED : ஜூன் 03, 2024 04:26 AM
மாமல்லபுரம், : மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், புதிய கட்டடம் கட்டி, அதில் அலுவலகம் இயங்குகிறது. பின், பேரூராட்சி கூடத்திற்காக தனி கட்டடம் கட்டப்பட்டது.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், முறைசாரா மாநாடாக, கடந்த 2019ல் மாமல்லபுரத்தில் சந்தித்தபோது, மாமல்லபுரம் முற்றிலும் மேம்படுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் அறை மற்றும் கூடம் ஆகியவை, உள் அலங்காரம், குளிர்சாதன வசதியுடன் மேம்படுத்தப்பட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றதும், செயல் அலுவலர் அறையை, பேரூராட்சி தலைவர் கைப்பற்றி, செயல் அலுவலருக்கு சாதாரண அறை ஒதுக்கப்பட்டது.
அலுவலர் அறை, கூடம் ஆகியவற்றை மேம்படுத்தி, நான்கு ஆண்டுகள் கடந்து, தற்போதும் நல்ல நிலையில் இருந்தது.
இந்நிலையில், இரண்டிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக உள் அலங்கார மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதனால், அவசியமே இல்லாமல், பேரூராட்சி பொது நிதியை வீணடிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.