/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறக்க முடிவு முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறக்க முடிவு
முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறக்க முடிவு
முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறக்க முடிவு
முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறக்க முடிவு
ADDED : ஜூலை 22, 2024 07:05 AM

தாம்பரம்: சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஆம்னி பேருந்துகளுக்கு பணிமனை வசதி இல்லை.
இதற்காக, தாம்பரம் அடுத்த முடிச்சூரில், வெளிவட்ட அணுகு சாலையை ஒட்டியுள்ள சி.எம்.டி.ஏ., இடத்தில், ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி 42 கோடி ரூபாயில் 5 ஏக்கரில் நடந்து வருகிறது.
இந்த பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அமைச்சர் சேகர்பாபு, நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒரே நேரத்தில் 117 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு, இந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. கழிப்பறை, குளியல் அறை ஓட்டுனர்கள், கிளீனர்கள் என 100 பேர் தங்கும் அளவிற்கு இரு கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள், இந்த பேருந்து நிலையம் திறக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள், 2025 மார்ச் மாதம் முடிக்கப்படும். இந்த பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
வண்டலுார் - மீஞ்சூர் இடையிலான 63 கி.மீ., வெளிவட்ட சாலையில், எதிர்கால பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 655 ஏக்கர் சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இதை பயன்படுத்தி, 4 இடங்களில், 12 கோடி ரூபாயில் உடற்பயிற்சி கூடம், பூங்கா, விளையாட்டு திடல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், 10 பிரிவாக தனித்தனியாக உள்ள, 53 ஏக்கர் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு மேம்படுத்தப்படும்.
தவிர, உயர் அழுத்த மின் வழித்தடம், நீர்நிலைகள் இல்லாத, 400 ஏக்கர் நிலத்தில் பொதுவான பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் திட்டமிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.