/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செட்டிபுண்ணியம் - வெங்கடாபுரம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை செட்டிபுண்ணியம் - வெங்கடாபுரம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
செட்டிபுண்ணியம் - வெங்கடாபுரம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
செட்டிபுண்ணியம் - வெங்கடாபுரம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
செட்டிபுண்ணியம் - வெங்கடாபுரம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : மார் 14, 2025 12:50 AM

மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் -- வெங்கடாபுரம் சாலை, 3 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையை வடகால், செட்டிபுண்ணியம், வெங்கடாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், சாலையை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் எடுத்துச் செல்லவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலையில் செட்டிபுண்ணியம் பகுதியில் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையின் அடிப்பகுதி சேதமடைந்து உள்ளது. இது தெரியாமல் புதிதாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாறி வருகின்றனர். சிலர், கீழே விழுந்தும் காயமடைகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் மழைக்காலங்களில் செட்டிபுண்ணியம் ஏரியின் உபரி நீர், இந்த சாலையைக் கடந்து செல்லும். கடந்த ஆண்டு அதிக அளவில் வெள்ள நீர் சென்றதால், சாலையின் அடிப்பகுதி சேதமடைந்தது. ஜல்லி கற்களும் பெயர்ந்தன. மேலும் சாலை பல இடங்களில் கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது.
இந்த சாலையில் விளக்குகளும் இல்லாததால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து, சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.