/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நுண்ணீர் பாசன திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு நுண்ணீர் பாசன திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
நுண்ணீர் பாசன திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
நுண்ணீர் பாசன திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
நுண்ணீர் பாசன திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 22, 2024 06:41 AM
அச்சிறுபாக்கம்: ச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் உள்ள குறு, சிறு விவசாயிகள், 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துக்கொள்ள, மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை வாயிலாக, பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, குறைந்த நீரில் அதிக பயிர் விளைவித்தல், 70 சதவீதம் வரை நீர் சேமிப்பு, தண்ணீர் பாய்ச்ச ஆட்கூலி சேமிப்பு, அதிக மகசூல் மற்றும் அதிக லாபம், குறைந்த அளவிலான களை உற்பத்தி உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
திட்டத்தின் வாயிலாக, அனைத்து குறு, சிறு மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்பெறலாம்.
குறு, சிறு விவசாயிகளுக்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள 100 சதவீத மானியத்தில், நுண்ணீர் பாசன கட்டுமானங்களை அமைக்கலாம். அதேபோல், மற்ற விவசாயிகள், 75 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற, அச்சிறுபாக்கம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, சிட்டா, ஆதார் அட்டை, நில வரைபடம், ரேஷன் கார்டு, கூட்டு வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.