Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கால்நடைகளுக்கு கோமாரி நோய் 10ல் தடுப்பூசி முகாம் துவக்கம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் 10ல் தடுப்பூசி முகாம் துவக்கம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் 10ல் தடுப்பூசி முகாம் துவக்கம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் 10ல் தடுப்பூசி முகாம் துவக்கம்

ADDED : ஜூன் 06, 2024 01:46 AM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம், வரும் 10ம் தேதி துவக்கப்பட உள்ளது.

இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

கால்நடைகளில் ஏற்படும் தொற்றுநோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் வாயிலாக, விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை சரி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், 2,54,200 கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி, வரும் 10ம் தேதி துவங்கி, 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

கால்நடை உரிமையாளர்கள், தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றுக்கு, கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us