ADDED : ஜூன் 18, 2024 05:02 AM
சென்னை : சென்னை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 18 வேளச்சேரி குருநானக் கல்லுாரி மாணவர். இவர், நேற்று மதியம் 12:30 மணிக்கு, தன் நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கரணை ஏரியில் குளிக்கச் சென்றார்.
ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற தீபக், நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரை காணவில்லை.
இதுகுறித்து நண்பர்கள்அளித்த தகவல்படி, பள்ளிக்கரணை போலீசார், மேடவாக்கம் தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து, தீபக்கை தேடி வருகின்றனர்.