/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ உங்களை தேடி; உங்கள் ஊரில் காட்டாங்கொளத்துாரில் முகாம் உங்களை தேடி; உங்கள் ஊரில் காட்டாங்கொளத்துாரில் முகாம்
உங்களை தேடி; உங்கள் ஊரில் காட்டாங்கொளத்துாரில் முகாம்
உங்களை தேடி; உங்கள் ஊரில் காட்டாங்கொளத்துாரில் முகாம்
உங்களை தேடி; உங்கள் ஊரில் காட்டாங்கொளத்துாரில் முகாம்
ADDED : ஜூன் 20, 2024 09:16 PM
செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று முன்தினம் மாலை, உங்களைத் தேடி; உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்மனுக்கள் பெறும் நிகழ்ச்சி, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. செங்கல்பட்டு தி.மு.க., -- எம்.எல்.ஏ., வரலட்சுமி முன்னிலை வகித்தார்.
காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர், ரெட்டிப்பாளையம், ஆத்துார், வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர் பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களைஅளித்தனர்.
இந்த முகாமில், 300க்கும் மேற்பட்டமனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.
இந்த முகாமில், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்உள்ளிட்ட, பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள்பங்கேற்றனர்.