/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செங்கையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 08:33 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை கண்டித்து, வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் செங்கல்பட்டு பார் அசோசியேஷன், செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேசன் இணைந்து, மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை கண்டித்து, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம்அருகில், நேற்றுஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன்உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
மேலும், 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு நகர போலீசார், 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.