/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிளாம்பாக்கம் - காஞ்சிபுரம் பேருந்து இயக்க கோரிக்கை கிளாம்பாக்கம் - காஞ்சிபுரம் பேருந்து இயக்க கோரிக்கை
கிளாம்பாக்கம் - காஞ்சிபுரம் பேருந்து இயக்க கோரிக்கை
கிளாம்பாக்கம் - காஞ்சிபுரம் பேருந்து இயக்க கோரிக்கை
கிளாம்பாக்கம் - காஞ்சிபுரம் பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2024 12:38 AM
கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்துள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு தினமும்ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
இங்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பேருந்து சேவை இல்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் சில பயணியர், காஞ்சிபுரத்திற்கு பேருந்து சேவை இல்லை என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
கூடுவாஞ்சேரி, வண்டலுார், கண்டிகை, பெருமாட்டுநல்லுார், மாடம்பாக்கம், மறைமலை நகர்உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தோர் காஞ்சிபுரம் செல்ல, தாம்பரத்தில் இருந்து அரசு மற்றும்தனியார் பேருந்துவாயிலாக செல்கின்றனர்.
தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள், பெருங்களத்தூர் வழியாக,வண்டலூர் ரயில்நிலையம் அருகே உள்ள மேம்பாலம்வழியாக மண்ணிவாக்கம்,படப்பை தடத்தில்காஞ்சிபுரம் செல்கின்றன.
இந்த பேருந்துகளை நேராக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு திருப்பிவிட்டு, இங்குள்ள பயணியரை ஏற்றிக் கொண்டு, வண்டலூர் வாயிலாக மண்ணிவாக்கம், படப்பைவழியாக காஞ்சிபுரம் செல்ல, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.