/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு நுாலக வசதியுடன் இம்மாதம் திறப்பு கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு நுாலக வசதியுடன் இம்மாதம் திறப்பு
கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு நுாலக வசதியுடன் இம்மாதம் திறப்பு
கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு நுாலக வசதியுடன் இம்மாதம் திறப்பு
கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு நுாலக வசதியுடன் இம்மாதம் திறப்பு
ADDED : ஜூலை 22, 2024 06:46 AM

சென்னை: சென்னையின் மைய பகுதியில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வனங்கள் உள்ளன.
ஒன்பது வகையான, 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான 314 பறவை இனங்கள் உள்ளன. சென்னை மக்கள் மற்றும் சுற்றுலா வருவோர், இந்த பூங்காவில் உலவும் உயிரினங்களை கண்டு ரசிப்பர்.
இந்நிலையில், இந்த பூங்காவை மேம்படுத்த, கடந்த ஆண்டு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அரசு ஒதுக்கிய 20 கோடி ரூபாய் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சி.எஸ்.ஐ.ஆர்., நிதி 10 கோடி ரூபாய் என ,மொத்தம் 30 கோடி ரூபாயில் பணி துவங்கியது.
அனைத்து பணிகளும் முடிந்து, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு இப்பூங்கா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கிண்டி சிறுவர் பூங்காவில் ஒரு நுாலகம் கட்டப்படுகிறது.
'இங்கு, வன உயிரினங்கள், பொது அறிவு மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன. வன உயிரினங்கள் குறித்து படித்து விட்டு, அதை நேரில் பார்க்கும்போது புதுமையான அனுபவம் கிடைக்கும்' என்றனர்.