/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கல்பாக்கம் மேம்பால பணி: எச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை கல்பாக்கம் மேம்பால பணி: எச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை
கல்பாக்கம் மேம்பால பணி: எச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை
கல்பாக்கம் மேம்பால பணி: எச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை
கல்பாக்கம் மேம்பால பணி: எச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை
ADDED : ஜூன் 07, 2024 01:49 AM

சதுரங்கப்பட்டினம்,:வெங்கப்பாக்கத்தில், புதுச்சேரி சாலை மேம்பாலபணிகள் நடப்பதால், வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. இத்தடத்தில், கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியில், சதுரங்கப்பட்டினம் சாலை குறுக்கிடுகிறது. இதில், கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம் செல்லும் வாகனங்கள், ஏராளமாக கடக்கின்றன.
எனவே, புதுச்சேரி சாலையில் தடையற்ற போக்குவரத்து கருதி, இங்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. பாலத்திற்கு துாண்கள் கட்டி, கார்டர்கள் நிறுவப்பட்டு, பிற கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், பாலத்தை ஒட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதையில், வாகனங்கள் எச்சரிக்கை யுடன் கடந்து செல்ல வேண்டும் என, ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.