/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கள்ளக்குறிச்சி விவகாரம் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி விவகாரம் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விவகாரம் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விவகாரம் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விவகாரம் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2024 12:57 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விற்பனையை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத விஷச்சாராயம் விற்பனை செய்த மற்றும் போதைப் பொருள் விற்பனையை, தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு தடுக்கத் தவறியுள்ளது.
தி.மு.க., அரசைகண்டித்து, மாவட்ட செயலர் அனகை முருகேசன் தலைமையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி, பழைய, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டமுக்கிய பகுதிகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.