/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ துணி வியாபாரி வீட்டில் நகை திருட்டு துணி வியாபாரி வீட்டில் நகை திருட்டு
துணி வியாபாரி வீட்டில் நகை திருட்டு
துணி வியாபாரி வீட்டில் நகை திருட்டு
துணி வியாபாரி வீட்டில் நகை திருட்டு
ADDED : ஜூலை 15, 2024 04:25 AM
பொன்னேரி : பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் சாலை, காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வமுருகன், 37. இவர், இருசக்கர வாகனத்தில், கிராமங்களில் சென்று துணி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 11ம் தேதி, சொந்த ஊரான தென்காசிக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை அவரது மனைவி பவானி வீடு திரும்பும்போது, பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, 2 சவரன் நகை, 10,000 ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.