/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தமிழ் செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு தமிழ் செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ் செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ் செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ் செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 28, 2024 01:12 AM
செங்கல்பட்டு,:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கும், தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின், https;//tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்கள், காஞ்சிபுரம் வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, ஆக., 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.