/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் வடிகால்வாய் அமைக்கும் பணி தீவிரம் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் வடிகால்வாய் அமைக்கும் பணி தீவிரம்
ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் வடிகால்வாய் அமைக்கும் பணி தீவிரம்
ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் வடிகால்வாய் அமைக்கும் பணி தீவிரம்
ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் வடிகால்வாய் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 19, 2024 12:20 AM

திருப்போரூர்:திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, விசேஷ நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், பல்வேறு பகுதி களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக உள்ள வடக்கு குளக்கரை,கிழக்கு குளக்கரை, சன்னிதிதெருக்களில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, அனுமதியின்றி தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
மேலும், சன்னிதி தெருவில், கடந்த 1996ம் ஆண்டு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பகுதியிலும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால், கால்வாயின் அகலம் குறுகி, துார்ந்து காணப்பட்டது. இதனால், மழைநீர் வெளியேறுவதிலும்சிக்கல் ஏற்பட்டு வந்தது.
தற்போது, மேற்கண்ட தெருக்களில் இருந்தஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டதால், பாதை விசாலமாக உள்ளது.
பழைய கால்வாயை அகற்றி, புதிய வடிகால்வாய் அமைக்கவும் வசதியாக உள்ளது.
அதனால், பேரூராட்சி பொது நிதியில், 29லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதில், முதற்கட்டமாக, தற்போது சன்னிதி தெருவில் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.