/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஸ்தலசயனர் கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம் ஸ்தலசயனர் கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்
ஸ்தலசயனர் கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்
ஸ்தலசயனர் கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்
ஸ்தலசயனர் கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்
ADDED : ஜூலை 17, 2024 08:28 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் பிரசித்திபெற்றது, ஸ்தலசயன பெருமாள் கோவில். 108 திவ்வியதேச கோவில்களில், 63ம் கோவிலாக விளங்குகிறது.
கோவிலில், தோஷ பரிகார நிவர்த்தி, உலக நன்மை ஆகியவை கருதி, ஆண்டுதோறும் மூன்று நாட்கள் பவித்ரோற்சவம் நடத்தப்படும்.
நேற்று மாலை, பவித்ரோற்சவம் துவங்கியது. உலகுய்ய நின்ற நாயனார் உற்சவர், தேவியருடன் எழுந்தருளி, ஹோமம், நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமறை, திருவாய்மொழி சேவை, வேத பாராயணம் ஆகியவற்றுடன் அங்குரார்ப்பணம் நடந்தது.
இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. நாளை, அனைத்து உற்சவ சுவாமியருக்கும், பவித்திர நுால் சாற்றி, ஹோமம், பூர்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவுபெறும்.