/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மக்கள் பயன்பாட்டிற்கு சிமென்ட் சாலை ஒப்படைப்பு மக்கள் பயன்பாட்டிற்கு சிமென்ட் சாலை ஒப்படைப்பு
மக்கள் பயன்பாட்டிற்கு சிமென்ட் சாலை ஒப்படைப்பு
மக்கள் பயன்பாட்டிற்கு சிமென்ட் சாலை ஒப்படைப்பு
மக்கள் பயன்பாட்டிற்கு சிமென்ட் சாலை ஒப்படைப்பு
ADDED : ஜூலை 24, 2024 12:31 AM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்கு உட்பட்ட டி.வி., நகர் பகுதி, பிள்ளையார் கோவில் தெரு, கடந்த சில ஆண்டுகளாக மண் சாலையாக இருந்தது.
இதனால், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகி, மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, ஊராட்சி நிர்வாகத்தினர் மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 8.50 லட்சம் ரூபாய் நிதியில், சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடந்தன. தற்போது, பணிகள் முடிந்து, சிமென்ட் சாலையை, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.