/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூடுவாஞ்சேரி ரயில் நிலைய பணி செப்., இறுதிக்குள் முடிக்க இலக்கு கூடுவாஞ்சேரி ரயில் நிலைய பணி செப்., இறுதிக்குள் முடிக்க இலக்கு
கூடுவாஞ்சேரி ரயில் நிலைய பணி செப்., இறுதிக்குள் முடிக்க இலக்கு
கூடுவாஞ்சேரி ரயில் நிலைய பணி செப்., இறுதிக்குள் முடிக்க இலக்கு
கூடுவாஞ்சேரி ரயில் நிலைய பணி செப்., இறுதிக்குள் முடிக்க இலக்கு
ADDED : ஜூலை 20, 2024 05:49 AM
சென்னை : 'அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்' என்ற திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு தடத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மறுமேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன.
இவற்றில் ஒரு நிலையமான கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில், பல்வேறு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கூடுவாஞ்சேரியை சுற்றி வளர்ச்சியடைந்த குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.
இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் 24,000 பேர் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தை 20.41 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பயணியருக்கு வசதியாக, லிப்ட், எஸ்கலேட்டர்கள், 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. தற்போதுள்ள நடைமேடைகள் மேம்படுத்த உள்ளன. ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் இரண்டு வளைவுகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த ரயில் நிலையத்தில், மேம்பாட்டு பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளன. செப்., இறுதிக்குள் அனைத்து பணிகளும் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.