/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஜி.எஸ்.டி., சாலை கடவுப்பாதை காட்டாங்கொளத்துாரில் மூடல் ஜி.எஸ்.டி., சாலை கடவுப்பாதை காட்டாங்கொளத்துாரில் மூடல்
ஜி.எஸ்.டி., சாலை கடவுப்பாதை காட்டாங்கொளத்துாரில் மூடல்
ஜி.எஸ்.டி., சாலை கடவுப்பாதை காட்டாங்கொளத்துாரில் மூடல்
ஜி.எஸ்.டி., சாலை கடவுப்பாதை காட்டாங்கொளத்துாரில் மூடல்
ADDED : ஜூலை 18, 2024 12:35 AM

மறைமலை நகர்:ஜி.எஸ்.டி., சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய சாலை.
காட்டாங்கொளத்துார் சிவானந்தா குருகுலம் அருகில், சாலையை கடக்கும் கடவுப்பாதை உள்ளது.
இந்த கடவுப்பாதை வழியாக, தினமும் காட்டாங்கொளத்துார், பொத்தேரி பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், இருபுறமும் சாலையை கடந்து சென்று வருகின்றனர்.
இது தவிர, 500 மீட்டர் துார இடைவெளியில், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட இடங்களில், சாலை சந்திப்பு உள்ளது.
அடுத்தடுத்து மூன்று சந்திப்புகள் உள்ளதால், சிவானந்தா குருகுலம் கடவுப்பாதையில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இந்த சந்திப்பை மூட வேண்டும் என, வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார், இந்த பகுதியில் இரும்பு பேரிகார்டுகள் அமைத்து, வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்பு அமைத்துள்ளனர்.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
இந்த கடவுப்பாதையில், உள்ளூர் மக்கள் வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
விபத்துகளை தடுக்க, இந்த கடவுப்பாதை மூடப்பட்டு உள்ளது. அருகில் போக்குவரத்து சிக்னலுடன் உள்ள பொத்தேரி, காட்டாங்கொளத்துார் சந்திப்புகளில் சாலையை கடக்க பயன்படுத்துமாறு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.