/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குரூப் - 2 போட்டி தேர்வுக்கு செங்கையில் இலவச பயிற்சி குரூப் - 2 போட்டி தேர்வுக்கு செங்கையில் இலவச பயிற்சி
குரூப் - 2 போட்டி தேர்வுக்கு செங்கையில் இலவச பயிற்சி
குரூப் - 2 போட்டி தேர்வுக்கு செங்கையில் இலவச பயிற்சி
குரூப் - 2 போட்டி தேர்வுக்கு செங்கையில் இலவச பயிற்சி
ADDED : ஜூலை 04, 2024 10:02 PM
செங்கல்பட்டு:தமிழக அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள குரூப் - 2 தேர்வுக்கு, செங்கையில் இலவச பயிற்சி வகுப்புகள்நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக அரசு பணியாளர் தேர்வு வாரியம், குரூப்--2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு வாயிலாக, மொத்தம் 2,327 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 19ம் தேதி.
செங்கல்பட்டு மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், ஜூலை 8ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.
இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள்,தங்களது புகைப்படம், விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல் மற்றும் ஆதார் எண்ஆகிய விபரங்களுடன்,நேரில் தொடர்பு கொண்டு இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு, 044 -- 2742 6020, 94868 70577, 63834 60933 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.