/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்; விரால்பாக்கத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்; விரால்பாக்கத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு
ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்; விரால்பாக்கத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு
ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்; விரால்பாக்கத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு
ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்; விரால்பாக்கத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு
ADDED : ஜூலை 28, 2024 11:45 PM

திருப்போரூர் : திருப்போரூர் - -செங்கல்பட்டு நெடுஞ்சாலையோரம், 50 ஏக்கர் பரப்பில் விரால்பாக்கம் ஏரி உள்ளது. இதன் வாயிலாக, 50 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஏரி அருகே குடியிருப்பு பகுதிகள், மதுபான கடை, வணிக கடைகள், இறைச்சி கடைகள், உணவகங்கள் உள்ளன.
ஏரி பகுதியில், மர்ம நபர்கள் இரவு நேரங்களில் இறைச்சிக் கழிவுகள், உணவக கழிவுகள், பிளாஸ்டிக் போன்ற குப்பையை கொட்டி செல்கின்றனர்.
ஏரியில் கொட்டிய குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் நீரில் மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஏரி நீர் மாசுபடுவதுடன், சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது.
மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. சாலையை கடக்கும் பேருந்து பயணியர், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக குப்பையை அகற்றவும், மீண்டும் அப்பகுதிகளில் குப்பை கொட்டாதவாறு கண்காணிக்கவும் வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
இந்த ஏரி அருகே குடிநீர் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை உள்ளன. இதிலிருந்து, பல குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது.
ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசடையும் சூழல் உள்ளது. ஏரி நீராதாரமும் மாசடையும் நிலை ஏற்படுகிறது. அருகே மதுபான கடைகள் இருப்பதால், மது பிரியர்களால் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், இந்த ஏரியில் வீசப்படுகின்றன.
இதை தடுக்கவும், குப்பையை அகற்றி ஏரியை துாய்மையாக வைத்திருக்கவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.