/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமனார், மாமியாரை தாக்கியவர் கைது மாமனார், மாமியாரை தாக்கியவர் கைது
மாமனார், மாமியாரை தாக்கியவர் கைது
மாமனார், மாமியாரை தாக்கியவர் கைது
மாமனார், மாமியாரை தாக்கியவர் கைது
ADDED : ஜூன் 10, 2024 11:10 PM
கானத்துார் : உத்தண்டி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 37. ஆட்டோ ஓட்டுனர். மனைவி விமலா, 25.
நேற்றுமுன்தினம், இவர்களின் மூன்று மகள்களுக்கு, திருப்போரூர், முருகன் கோவிலில் காது குத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், உறவினர்கள் அளித்த 1 கிராம் தங்க மோதிரத்தை, விமலா தொலைத்ததாக கூறப்படுகிறது. இரவு, மது போதையில் வீட்டுக்கு சென்ற சக்திவேல், மோதிரம் குறித்து விமலாவுடன் சண்டை போட்டுள்ளார்.
இதை, விமலாவின் தாய் கீதா, 58, சரவணன், 61, ஆகியோர் தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், ஆட்டோவில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து, இருவரது தலையில் பலமாக தாக்கினார். காயமடைந்த கீதா, சரவணனை அக்கம்பக்கத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கானத்துார் போலீசார், சக்திவேலை கைது செய்து விசாரிக்கின்றனர்.