Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குறுகிய இடத்தில் மதுராந்தம் தீயணைப்பு நிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகே மாற்ற எதிர்பார்ப்பு

குறுகிய இடத்தில் மதுராந்தம் தீயணைப்பு நிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகே மாற்ற எதிர்பார்ப்பு

குறுகிய இடத்தில் மதுராந்தம் தீயணைப்பு நிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகே மாற்ற எதிர்பார்ப்பு

குறுகிய இடத்தில் மதுராந்தம் தீயணைப்பு நிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகே மாற்ற எதிர்பார்ப்பு

ADDED : மார் 11, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட கடப்பேரி வெண்காட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள, மதுராந்தகம் தீயணைப்பு நிலையத்தை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில், தனியார் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வந்தது.

பின், கடந்த 1982ல், வெண்காட்டீஸ்வரர் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, மதுராந்தகம் வர்த்தக சங்கத்தாரால், மதுராந்தகம் தீயணைப்பு மற்றும்- மீட்பு பணிகள் நிலையத்திற்கென, தனியாக கட்டடம் கட்டுவதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டது.

பின், 1985ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அன்று முதல் தற்போது வரை, மதுராந்தகம் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

தற்போது, 20 பணியாளர்கள் உள்ளனர். ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் ஒரு விரைவான தீயணைப்பு வாகனம் ஆகியவை உள்ளன.

மதுராந்தகம் நகர் பகுதி, புறநகர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால், வெண்காட்டீஸ்வரர் கோவில் தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெரு உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து தீயணைப்பு வாகனத்தை, மதுராந்தகம் நகர் பகுதியை தாண்டி வெளியே எடுத்துச் செல்வதற்கு காலதாமதம் ஆகிறது.

மதுராந்தகம் நகரின் உள் பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் குடிசை வீடுகள் இல்லை.

ஆனால், மதுராந்தகம் நகருக்கு வெளியே சிலாவட்டம், பாக்கம், வேடந்தாங்கல், புக்கத்துறை, படாளம், கக்கிலப்பேட்டை, மேலவலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு தீயணைப்பு வாகனத்தை உடனே எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.

வெண்காட்டீஸ்வரர் கோவில் பகுதியில் திருவிழா காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இருசக்கர வாகனங்கள், சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.

அதேபோன்று, பஜனை கோவில் தெரு பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்டவை, தெரு பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், தீயணைப்பு வாகனத்தை விரைந்து எடுத்துச் செல்வதில் பெரும் சிரமமாக உள்ளது.

காவல் நிலையம் சாலை மற்றும் ஜி.எஸ்.டி., சாலை பகுதிகளில், நடைபாதையை ஆக்கிரமித்து பலர் கடைகள் வைத்துள்ளனர்.

கடைகளுக்கு வருவோரும், சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, கடைகளுக்குச் செல்கின்றனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தீயணைப்பு வாகனம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, காவல்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இது குறித்து ஆய்வு செய்து, தீயணைப்பு நிலையத்தை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள பகுதியில் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் தீயணைப்பு நிலையம் வெண்காட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ளதால், அவசர அழைப்பு காரணமாக, தீயணைப்பு வாகனங்களை விரைந்து வெளியே கொண்டு செல்ல மிகவும் தாமதமாகிறது. சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தீயணைப்பு நிலையத்தை மாற்ற வேண்டும்.

மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில், தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள கருங்குழி, கக்கிலப்பேட்டை, மேலவலம்பேட்டை, படாளம், புக்கத்துறை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால், விரைந்து வாகனங்களைக் கொண்டு செல்ல முடியும்.

இதனால் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களை தவிர்க்க முடியும்.

- தினகரன்,

ஜமீன் எண்டத்துார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us