/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செய்யூர் பஸ் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தல் செய்யூர் பஸ் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
செய்யூர் பஸ் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
செய்யூர் பஸ் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
செய்யூர் பஸ் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2024 06:09 AM

செய்யூர்: செய்யூர் பஜார் பகுதி யில், எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்திற்கு, தினசரிநுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பேருந்து நிலையத் திற்கு வந்து செல்லாமல், பவுஞ்சூர் சாலையிலும், சித்தாமூர் சாலையிலும் நிறுத்தப்படுவதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பவுஞ்சூர் சாலையில் பயணியர் இறக்கி விடப்படுவதால், வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம் செல்வோர், அரசுப் பள்ளி மாணவர்கள், 1 கி.மீ., துாரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி, குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் வணிக வளாகங்கள் அமைத்து பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.
அதோடு, மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து இயக்கி, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என, அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.