/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சரவம்பாக்கத்தில் வலியுறுத்தல் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சரவம்பாக்கத்தில் வலியுறுத்தல்
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சரவம்பாக்கத்தில் வலியுறுத்தல்
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சரவம்பாக்கத்தில் வலியுறுத்தல்
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சரவம்பாக்கத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 07:00 AM

சித்தாமூர், : சித்தாமூர் அருகே சரவம்பாக்கம் கிராமம், அண்ணா தெரு பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், சாலை மற்றும் தெரு விளக்கு வசதி இல்லாமல், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
சாலை வசதி இல்லாததால், மழைக்காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்குவதாலும், சகதியாக மாறுவதாலும், நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும், தெரு விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் தெருக்களில் நடந்து செல்ல, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் சாலை அமைக்கவும், புதிய மின் கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.