/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கண்ணகப்பட்டு கோவிலில் துரியோதனன் படுகளம் கண்ணகப்பட்டு கோவிலில் துரியோதனன் படுகளம்
கண்ணகப்பட்டு கோவிலில் துரியோதனன் படுகளம்
கண்ணகப்பட்டு கோவிலில் துரியோதனன் படுகளம்
கண்ணகப்பட்டு கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED : ஜூலை 15, 2024 06:15 AM

திருப்போரூர் : கண்ணகப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணகப்பட்டில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு கடந்த 26ம் தேதி அக்னி வசந்த உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
தையூர்
தையூர் ஊராட்சியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், 10ம் ஆண்டு வசந்த உற்சவ பெருவிழா, கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 10:00 மணியளவில் துரியோதனன் படுகள நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.
இதில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.