/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாவட்ட லீக் கிரிக்கெட்; கொரட்டூர் வெற்றி மாவட்ட லீக் கிரிக்கெட்; கொரட்டூர் வெற்றி
மாவட்ட லீக் கிரிக்கெட்; கொரட்டூர் வெற்றி
மாவட்ட லீக் கிரிக்கெட்; கொரட்டூர் வெற்றி
மாவட்ட லீக் கிரிக்கெட்; கொரட்டூர் வெற்றி
ADDED : ஜூன் 10, 2024 12:55 AM

சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான லீக் கிரிக்கெட் போட்டிகள், செங்குன்றம் தனியார் பொறியியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
இதில், அணிகள் 'டிவிஷன்' வாரியாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், நேற்று முன்தினம் டிவிஷன் - 1ல் இடம்பெற்றுள்ள கொரட்டூர் அணியும், பைன் ஸ்டார் அணியும் மோதின.
முதலில் களமிறங்கிய பைன் ஸ்டார் அணி, 44 ஓவர்களில் 215 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கொரட்டூர் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பசுபதி, 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த சீசனில் மூன்றாவது முறையாக, அவர் 5 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, எளிதான இலக்கை நோக்கி கொரட்டூர் அணி, 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.