/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புதிய வாகனம் வினியோகம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புதிய வாகனம் வினியோகம்
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புதிய வாகனம் வினியோகம்
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புதிய வாகனம் வினியோகம்
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புதிய வாகனம் வினியோகம்
ADDED : ஜூன் 25, 2024 06:22 AM
செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மாவட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, ஏழு புதிய பொலிரோ வாகனங்களை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய வருவாய் கோட்டாட்சியர்கள், செங்கல்பட்டு, செய்யூர், திருக் கழுக்குன்றம், தாம்பரம் ஆகிய தாசில்தார்கள்ஆகியோருக்கு புதிய வாகனம் வழங்க, அரசுக்கு மாவட்ட நிர்வாகம்கருத்துரு அனுப்பியது.
அதன்பின், ஏழு புதிய பொலிரோ வாகனங்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின், சில தினங்களுக்கு முன் வழங்கினார்.
செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில், சப்- - கலெக்டர் நாராயணசர்மாஉள்ளிட்ட அதிகாரிகளுக்கு, புதிய போலிரோ வாகனங்களை, கலெக்டர் அருண்ராஜ் நேற்றுவழங்கினார்.