/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூட்டுறவு ஒன்றியத்திற்கு ரூ.34 லட்சம் வழங்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்கு ரூ.34 லட்சம் வழங்கல்
கூட்டுறவு ஒன்றியத்திற்கு ரூ.34 லட்சம் வழங்கல்
கூட்டுறவு ஒன்றியத்திற்கு ரூ.34 லட்சம் வழங்கல்
கூட்டுறவு ஒன்றியத்திற்கு ரூ.34 லட்சம் வழங்கல்
ADDED : ஜூன் 06, 2024 11:26 PM
செங்கல்பட்டு:கல்பாக்கம் அணுசக்தித் துறை ஊழியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய கடன் சங்கத்திலிருந்து, லாபத்தொகையான 34.4 லட்சம் ரூபாயை, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடம், நேற்று வழங்கப்பட்டது.
கல்பாக்கம் அணுசக்தித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் லாபத்தொகையிலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியாக 20,41,371 ரூபாய் செலுத்த வேண்டும்.
கூட்டுறவு கல்வி நிதியாக 13,60,914 ரூபாய் மற்றும் ஆண்டு சந்தா 2,000 ரூபாய் என, மொத்தம் 34,04,285 ரூபாயை, செங்கல்பட்டு மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமாரிடம், நேற்று சங்கத்தினர் வழங்கினர்.
இதில், கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் பாலாஜி, கண்காணிப்பாளர் வேணுகோபால், சங்கத்தின் செயலர் திருமுருகன், முதுநிலை கணக்காளர் கோவிந்தசாமி, ஒன்றிய மேலாளர் ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.