/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மழைநீர் வடிகால்வாய் பணி தாமதம் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர் மழைநீர் வடிகால்வாய் பணி தாமதம் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்
மழைநீர் வடிகால்வாய் பணி தாமதம் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்
மழைநீர் வடிகால்வாய் பணி தாமதம் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்
மழைநீர் வடிகால்வாய் பணி தாமதம் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்
ADDED : ஜூலை 24, 2024 12:47 AM

திருப்போரூர்:திருப்போரூரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஓ.எம்.ஆர்., சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன.
எனினும், சில இடங்களில் பணிகளை முடிக்காமல் பாதியில் விடப்பட்டுள்ளது.அந்த வகையில், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, ஏரிக்கரை சாலை இணையும் இடத்தில், மழைநீர் வடிகால்வாய் இணைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட கால்வாயிலும், கழிவுநீர் குளம் போல தேங்கியுள்ளது.
கால்வாயில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் நாளுக்கு நாள் அதிகரித்து, கால்வாயிலிருந்து வெளியேறி சாலையில் ஓடுகிறது.
அந்த வழியாக செல்லும் மக்கள், அதனை மிதித்துக் கடப்பதுடன், துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதியுடன் செல்கின்றனர்.
எவவே, மேற்கண்ட இடத்தில் மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கழிவுநீர் சாலையில் ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.