/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ விஷமுறிவு மருந்து தயாரிப்பிற்காக இருளர்கள் பாம்பு பிடிக்க அனுமதி விஷமுறிவு மருந்து தயாரிப்பிற்காக இருளர்கள் பாம்பு பிடிக்க அனுமதி
விஷமுறிவு மருந்து தயாரிப்பிற்காக இருளர்கள் பாம்பு பிடிக்க அனுமதி
விஷமுறிவு மருந்து தயாரிப்பிற்காக இருளர்கள் பாம்பு பிடிக்க அனுமதி
விஷமுறிவு மருந்து தயாரிப்பிற்காக இருளர்கள் பாம்பு பிடிக்க அனுமதி
ADDED : ஜூலை 06, 2024 10:29 PM
மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பாரம்பரிய முக்கிய தொழிலாக, பாம்பு பிடிக்கின்றனர்.
அவர்களின் வாழ்வாதாரம் கருதி, தமிழக தொழில் மற்றும் வணிக துறையின்கீழ், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம், கடந்த 45 ஆண்டுகளாக செயல்படுகிறது.
இச்சங்கத்திற்கு உரிமம் வழங்கி, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து, உறுப்பினர்களுக்கும் பாம்பு பிடிக்கும் உரிமம் வழங்கப்படுகிறது. பாம்பு கடி விஷமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட வகை பாம்புகளிலிருந்து, குறிப்பிட்ட அளவில் விஷம் பிரித்து எடுத்து, மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாம்புகள் இனப்பெருக்க காலமான, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, பாம்பு பிடிப்பதை தவிர்த்து, மற்ற மாதங்களில் பாம்புகள் பிடிக்கப்படுகின்றன. தமிழக வனத்துறை, தற்போது பாம்பு பிடிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சங்க நிர்வாகத்தினர் கூறியதாவது:
நல்லபாம்பு, கண்ணாடிவிரியன் ஆகிய பாம்புகள் பிடிக்க மத்திய அரசும், கட்டுவிரியன் மற்றும் சுருட்டைவிரியன் ஆகிய பாம்புகள் பிடிக்க தமிழக அரசும், ஒவ்வொரு ஆண்டும் அனுமதி வழங்கி வருகிறது.
தமிழக அரசு, நடப்பாண்டில் 3,500 சுருட்டைவிரியன், 750 கட்டுவிரியன் பாம்புகளை பிடிக்க அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். 339 உறுப்பினர்களுக்கு உரிமம் வழங்கி, சற்று வெப்பம் தணிந்தவுடன் பாம்புகள் பிடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.