/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மின்மாற்றியின் கம்பங்கள் சேதம் பொற்பனங்கரணையில் ஆபத்து மின்மாற்றியின் கம்பங்கள் சேதம் பொற்பனங்கரணையில் ஆபத்து
மின்மாற்றியின் கம்பங்கள் சேதம் பொற்பனங்கரணையில் ஆபத்து
மின்மாற்றியின் கம்பங்கள் சேதம் பொற்பனங்கரணையில் ஆபத்து
மின்மாற்றியின் கம்பங்கள் சேதம் பொற்பனங்கரணையில் ஆபத்து
ADDED : ஜூன் 14, 2024 12:41 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே பொற்பனங்கரணை ஊராட்சியில் உள்ள மின் மாற்றியின் கம்பங்கள், மிகவும் சேதம் அடைந்து உள்ளன.
ஒரத்தி- - எலப்பாக்கம் செல்லும் சாலை ஓரம், மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எலப்பாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து, பொற்பனங்கரணை பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மின்மாற்றியில்இருந்து, 50க்கும் மேற்பட்டமோட்டார் இணைப்புகளும், 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு களுக்கான வீட்டு மின் இணைப்புகளும் உள்ளன.
சில மாதங்களாக மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள கம்பங்கள், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதுடன், பலம் இழந்த நிலையில் உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள பழைய மின் கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய கம்பங்கள் அமைக்க வேண்டும் என,அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.