/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு பள்ளி நுழைவாயிலில் மண் குவியலால் ஆபத்து அரசு பள்ளி நுழைவாயிலில் மண் குவியலால் ஆபத்து
அரசு பள்ளி நுழைவாயிலில் மண் குவியலால் ஆபத்து
அரசு பள்ளி நுழைவாயிலில் மண் குவியலால் ஆபத்து
அரசு பள்ளி நுழைவாயிலில் மண் குவியலால் ஆபத்து
ADDED : ஜூன் 24, 2024 06:23 AM

அச்சிறுபாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையோரம் பள்ளி அமைந்துள்ளது.
இப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு பேருந்துகளில் பயணித்தும், சைக்கிளிலும் மாணவியர் வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, பள்ளி வளாகத்தில் இருந்து, மழைநீருடன் அடித்துச் செல்லப்பட்ட மண், நுழைவாயில் பகுதியில் குவிந்து, சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
சைக்கிளில் வரும் மாணவியர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி கீழே விழுகின்றனர்.
மேலும், சாலையில் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக மண் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவியரின் பெற்றோர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.