/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைப்பு குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைப்பு
குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைப்பு
குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைப்பு
குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைப்பு
ADDED : ஜூன் 03, 2024 06:10 AM

செய்யூர், ; செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஏரிக்கு நடுவே உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக, மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் கிணற்றுக்கு மேற்புற மூடி இல்லாததால், ஏரி நீரில் அடித்துவரும் குப்பை குடிநீர் கிணற்றில் தேங்குவதாக அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதுகுறித்து, செய்யூர் ஊராட்சி தலைவர் லோகாம்பிகையிடம் கேட்டதற்கு, “குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க, ஊராட்சி சார்பாக முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில வாரங்களில், குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்கப்படும்,” என, கூறினார்.
ஊராட்சி தலைவரின் இந்த விளக்கத்துடன், கடந்த பிப்., மாதம் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது செய்யூர் ஊராட்சி சார்பாக, குடிநீர் கிணற்றில் இருந்த குப்பை அகற்றப்பட்டு, புதிய இரும்பு மேல்தளம் அமைக்கப்பட்டுள்ளது.