/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சுகாதார பணிகளில் சுணக்கம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு சுகாதார பணிகளில் சுணக்கம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
சுகாதார பணிகளில் சுணக்கம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
சுகாதார பணிகளில் சுணக்கம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
சுகாதார பணிகளில் சுணக்கம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ரமேஷ் - தி.மு.க.:
வேதசாலம் நகரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். சாலையில் நாய், கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.
பிரவுவேல் - தி.மு.க.:
செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் பள்ளிகள் உள்ளன. இப்பகுதிகளில், காலை 8:00 - 9:30 மணி வரையும், மாலை 4:30 - 5:30 மணி வரையும் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
நகரமன்ற தலைவர்:
நெடுஞ்சாலைத் துறை மற்றும் போலீசாரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்தியா - தி.மு.க.:
தனியார் நிறுவனம் குப்பை எடுக்க, மாதந்தோறும் 24 லட்சம் ரூபாய் நகராட்சி நிர்வகாம் வழங்குகிறது. என் வார்டில் 450 வீடுகளில் முறையாக குப்பை சேகரிக்க வருவதில்லை. இதனால், சாலையில் குப்பை தேங்குகிறது.
ரமேஷ் தி.மு.க.:
நகரில், குப்பை எடுக்கும் பணிகளை, தனியார் மேற்பார்வையாளர் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பதில்லை. வீடு வீடாக சென்று, குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும். குப்பையை சாலையில் போட்டால், வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
நகரமன்ற தலைவர்:
நகராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று குப்பைகள் வாங்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி பொறியாளர்:
குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பானுப்பிரியா, அ.தி.மு.க.:
குண்டூர் மக்கள் பயன்பாட்டிற்காக, சுடுகாட்டிற்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. சுடுகாட்டு பகுதியில் சுற்றுசுவர் அமைத்து பராமரிக்க வேண்டும்.