/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குழந்தைக்கு கையில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ் மீது புகார் குழந்தைக்கு கையில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ் மீது புகார்
குழந்தைக்கு கையில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ் மீது புகார்
குழந்தைக்கு கையில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ் மீது புகார்
குழந்தைக்கு கையில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ் மீது புகார்
ADDED : ஜூலை 22, 2024 06:44 AM
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, வரதராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனாட்சி.
இவர், தன் இரண்டு வயது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக, கன்னிவாக்கத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்திற்கு, நேற்று முன்தினம் சென்றார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த நர்ஸ் அருள்ஜோதி என்பவர், குழந்தையின் பெயர் மற்றும் வயதை எழுதிவிட்டு, இரண்டு கையிலும் தலா ஒரு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்தனாட்சி, தொடையில் செலுத்த வேண்டிய ஊசியை, ஏன் கையில் செலுத்தினீர்கள் என, நர்ஸிடம் கேட்டுள்ளார்.
அதற்கு நர்ஸ் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால், நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து, மருத்துவ அதிகாரி சிந்துவிடம், அருள் ஜோதி மீது, சந்தனாட்சி புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட மருத்துவ அதிகாரி, அதை செங்கல்பட்டு மாவட்ட துணை சுகாதார இயக்குனருக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.