/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நகர்ப்புற வாழ்விட வாரிய மாணவர்களுக்கு போட்டிகள் நகர்ப்புற வாழ்விட வாரிய மாணவர்களுக்கு போட்டிகள்
நகர்ப்புற வாழ்விட வாரிய மாணவர்களுக்கு போட்டிகள்
நகர்ப்புற வாழ்விட வாரிய மாணவர்களுக்கு போட்டிகள்
நகர்ப்புற வாழ்விட வாரிய மாணவர்களுக்கு போட்டிகள்
ADDED : ஜூலை 20, 2024 05:59 AM

சென்னை : செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 30,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இங்குள்ள மாணவ - மாணவியரின் விளையாட்டு திறனை மேம்படுத்த, சமுதாய வளர்ச்சி பிரிவு மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை இணைந்து, விளையாட்டு போட்டிகள் நடத்துகின்றன.
கபடி, ஓட்டம், தொடர் ஓட்டம், கேரம், செஸ், கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில், 12 முதல் 35 வயதுக்கு உட்பட்ட, 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகள் அங்குள்ள வெவ்வேறு மைதானங்களில் நடைபெறுகின்றன.
ஓட்டப்பந்தய போட்டிக்கு, முதல் மூன்று பரிசுகளும், மீதமுள்ள போட்டிகளுக்கு குழுக்காக தேர்வு செய்து, முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இப்போட்டிகளை, நிர்வாக பொறியாளர் குமரேசன், சமுதாய வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் சுவைக்கின், டார்வின், தமிழரசி, விளையாட்டு பயிற்சியாளர் வினோத் மற்றும் களப்பணியாளர்கள் முன்னின்று நடத்தினர்.