Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மீன்வள கல்வி நிறுவன மாணவர்களுக்கு போட்டி

மீன்வள கல்வி நிறுவன மாணவர்களுக்கு போட்டி

மீன்வள கல்வி நிறுவன மாணவர்களுக்கு போட்டி

மீன்வள கல்வி நிறுவன மாணவர்களுக்கு போட்டி

ADDED : ஜூன் 17, 2024 03:05 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்,: திருப்போரூர் அடுத்த இ.சி.ஆர்., சாலை, முட்டுக்காட்டில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், மீன் வளர்ப்பு தொழில் காப்பகம் மற்றும் தொழிற் பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இதில், 90 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஜம்பு தீவு பிரகடனமே, முதல் விடுதலை குரலாக பார்க்கப்படுகிறது. அந்த பிரகடனம், கி.பி., 1801ல், ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

இதனை நினைவூட்டி அறிந்துகொள்ளும் வகையில், மாணவ - மாணவியரிடையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப்போட்டி, பேச்சுபோட்டி மற்றும் ஓவியப்போட்டிகள், நேற்று நடந்தன.

இதில், ஒவ்வொரு போட்டியிலும் முதல் மற்றும் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us