/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வரி பாக்கி வைத்த நிறுவனத்திற்கு 'சீல்' வரி பாக்கி வைத்த நிறுவனத்திற்கு 'சீல்'
வரி பாக்கி வைத்த நிறுவனத்திற்கு 'சீல்'
வரி பாக்கி வைத்த நிறுவனத்திற்கு 'சீல்'
வரி பாக்கி வைத்த நிறுவனத்திற்கு 'சீல்'
ADDED : மார் 12, 2025 03:02 AM
செங்குன்றம்:செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி, சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள பர்வீன் டிராவல்ஸ் நிறுவன வளாகத்தில், பேருந்துகளை பழுது நீக்கும் பணி செய்யப்படுகிறது. இங்கு, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சிக்கு, 6 லட்ச ரூபாய் வரை வரி பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உயரதிகாரிகளின் உத்தரவின்படி, புழல் ஊராட்சி ஒன்றியம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ் தலைமையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்றனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி, நிறுவன கேட்டை இழுத்து மூடி 'சீல்' வைத்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.