ADDED : ஜூலை 07, 2024 10:54 PM
மேல்மருவத்துார் : திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 23. இவர், மேல்மருவத்துார் தனியார் பல் மருத்துவக் கல்லுாரியில், நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 6ம் தேதி, காலை 6:30 மணிக்கு, பிரியதர்ஷினியின் அம்மா பழனியம்மாள், மேல்மருவத்துார் கோவிலுக்கு தன்னுடன் மகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது, கல்லுாரி நுழைவுவாயில் அருகே நின்றுள்ளனர். அப்போது, தண்ணீர் பாட்டில் வாங்கி வர, பழனியம்மாள் அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்.
பின், திரும்பி வந்து பார்த்தபோது, பிரியதர்ஷினி அங்கு இல்லை. கோவில் முழுதும் தேடி பார்த்தும், பிரியதர்ஷினியை காணவில்லை.
பின், இது குறித்து, நேற்று மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.