Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சித்திரை சொர்ணவாரி பருவ விவசாய பணிகள் தீவிரம்

சித்திரை சொர்ணவாரி பருவ விவசாய பணிகள் தீவிரம்

சித்திரை சொர்ணவாரி பருவ விவசாய பணிகள் தீவிரம்

சித்திரை சொர்ணவாரி பருவ விவசாய பணிகள் தீவிரம்

ADDED : ஜூன் 13, 2024 04:57 PM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இதில், கருநிலம், கொண்டமங்கலம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம், பாலுார், குருவன்மேடு, வடகால், ஆத்துார் உள்ளிட்ட கிராமங்களில், விவசாயமே பிரதான தொழில்.

இங்கு, நெல், வாழை, வேர் கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்கள், 4,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. அதிக அளவில் நெல் பயிரிடப்படுகிறது.

மேற்கண்ட கிராமங்களில், ஆடிப்பட்டம், கார்த்திகை பட்டங்களில் மட்டுமே, பெரும்பாலும் விவசாயம் செய்து வந்தனர்.

சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக, பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் சித்திரை சொர்ணவாரி பட்டத்திற்கு, விளைநிலங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அண்டை வெட்டுதல், உழவு உழுதல், வரப்பு அமைத்தல் போன்ற பணிகளில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடி நெல் விதைத்தல் மற்றும் நடவு முறையில், பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கோடை மழையின் காரணமாக, சொர்ணவாரி பட்டத்திற்கு விளைநிலங்களை தயார்படுத்தி வருகிறோம். பல ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு சித்திரை சொர்ணவாரி பட்டத்தில் பயிரிட்டப்பட்டது.

இந்த ஆண்டும் மழை பெய்ததால், பல விவசாயிகள் ஆர்வத்துடன் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் நேரடி விதைத்தல் முறையில் பயிரிட்டுள்ளனர். இதன் வாயிலாக செலவு சற்று குறைவு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us