/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கல்பாக்கத்தில் சிறுவர் செஸ் போட்டி கல்பாக்கத்தில் சிறுவர் செஸ் போட்டி
கல்பாக்கத்தில் சிறுவர் செஸ் போட்டி
கல்பாக்கத்தில் சிறுவர் செஸ் போட்டி
கல்பாக்கத்தில் சிறுவர் செஸ் போட்டி
ADDED : ஜூன் 24, 2024 06:14 AM

கல்பாக்கம்: கல்பாக்கம் செஸ் அகாடமி, 'நெஸ்கோ' கழகம் ஆகியவை இணைந்து, கல்பாக்கம் பல்நோக்கு கூடத்தில், செஸ் போட்டியை நேற்று நடத்தின. பொதுப்பணி சேவைகள் எஸ் அண்டு ஆர்.எம்.ஜி., இணை இயக்குனர் வனஜா நாகராஜு, போட்டியை துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, 8, 10, 14, 17 ஆகிய வயதிற்குட்பட்ட நான்கு பிரிவுகளில், 150 பேர் விளையாடினர். ஒவ்வொரு பிரிவிலும் ஆண்கள் 10 பேர், பெண்கள் 10 பேர் வீதம், மொத்தம் 80 பேர் வெற்றி பெற்றனர்.
நிறைவு விழாவில், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
'நெஸ்கோ' நிர்வாக குழு தலைவர் ராஜன், பொதுச்செயலர் அஸ்கர் அலி, கல்பாக்கம் செஸ் அகாடமி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.