/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சென்னை - மாமல்லை இ.சி.ஆரில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு சென்னை - மாமல்லை இ.சி.ஆரில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு
சென்னை - மாமல்லை இ.சி.ஆரில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு
சென்னை - மாமல்லை இ.சி.ஆரில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு
சென்னை - மாமல்லை இ.சி.ஆரில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு
ADDED : ஜூன் 11, 2024 08:57 PM
மாமல்லபுரம்:சென்னை அக்கரை - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து, சுங்க கட்டண சாலையாக நிர்வகிக்கிறது.
இத்தடத்தில் கடக்கும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம், ஆண்டுதோறும் ஏப்., 1ம் தேதி முதல் உயர்த்தப்படும்.
லோக்சபா தேர்தல் நடந்ததால், கட்டணம் உயர்த்தப்படாமல் முந்தைய கட்டணமே வசூலிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், தற்போது கட்டணத்தை உயர்த்தி, இன்று முதல் திருத்திய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை, புதிய கட்டணம் நடைமுறையில் இருக்கும்.