/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தடுப்பணை குறித்து அறிவிக்காததால் செங்கல்பட்டு விவசாயிகள் அதிருப்தி தடுப்பணை குறித்து அறிவிக்காததால் செங்கல்பட்டு விவசாயிகள் அதிருப்தி
தடுப்பணை குறித்து அறிவிக்காததால் செங்கல்பட்டு விவசாயிகள் அதிருப்தி
தடுப்பணை குறித்து அறிவிக்காததால் செங்கல்பட்டு விவசாயிகள் அதிருப்தி
தடுப்பணை குறித்து அறிவிக்காததால் செங்கல்பட்டு விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 23, 2024 04:43 AM
மாமல்லபுரம் : பாலாற்றில் புதிய தடுப்பணைகள் கட்ட, சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகாததால், அப்பகுதி விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உருவாகும் பாலாறு, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியே கடந்து, கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, கடலில் கலந்து வீணாகிறது.
குடிநீர், விவசாய பாசன நீராதாரம் கருதி, ஆற்றில் மழைநீரைத் தேக்க, குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டுமாறு, அப்பகுதி மக்கள், அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
கல்பாக்கம் அணுசக்தித் துறை தண்ணீர் தேவை கருதி, 32.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஆற்று முகத்துவாரப் பகுதி, வாயலுார் - கடலுார் ஆற்றுப்படுகையில், கடந்த 2019ல் தடுப்பணை கட்டப்பட்டது.
அங்கிருந்து 15 கி.மீ., தொலைவில், வல்லிபுரம் - ஈசூர் படுகையில், பொதுப்பணித்துறை சார்பில், அதே ஆண்டு, மற்றொரு தடுப்பணையும் கட்டப்பட்டது. இரண்டு பகுதிகளிலும், 1 டி.எம்.சி., மழைநீர் தேக்கப்பட்டு வருகிறது.
இரண்டு தடுப்பணை பகுதிகளின் இடையே நல்லாத்துார், பொன்விளைந்தகளத்துார் அடுத்த உதயம்பாக்கம் - படாளம் ஆகிய பகுதிகளில், அடுத்தடுத்து தடுப்பணை கட்ட முடிவெடுத்து, பொதுப்பணித்துறை அரசிடம் பரிந்துரைத்தும், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், அத்துறை மானிய விவாதத்தில், தடுப்பணை திட்டம் குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால், அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.