/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குறுவட்டம் வாரியாக ஆதார் மையம் துவக்க கோரிக்கை குறுவட்டம் வாரியாக ஆதார் மையம் துவக்க கோரிக்கை
குறுவட்டம் வாரியாக ஆதார் மையம் துவக்க கோரிக்கை
குறுவட்டம் வாரியாக ஆதார் மையம் துவக்க கோரிக்கை
குறுவட்டம் வாரியாக ஆதார் மையம் துவக்க கோரிக்கை
ADDED : ஜூன் 09, 2024 02:18 AM
செய்யூர்,:செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் லத்துார், சித்தாமூர், கயப்பாக்கம், சூணாம்பேடு, கொடூர், செய்யூர், கடப்பாக்கம் என, 7 குறுவட்டங்கள் உள்ளன.
செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்டோர் புதிய ஆதார் கார்டு பதிவு செய்தல், முகவரி, பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண், புகைப்படம், கைரேகை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு, செய்யூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு வந்து செல்கின்றனர்.
ஆதார் சேவை மையத்தில் இரண்டு கணினிகள் மட்டுமே உள்ளதால், குறிப்பிட்ட அளவு டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பள்ளி மாணவர் சேர்க்கைக்கு முக்கிய சான்றாக ஆதார் அட்டை கேட்கப்படுகிறது.
ஆதார் அட்டையில் பெயர், முகவரி, புகைப்படம் போன்றவற்றில் திருத்தம் உள்ள மாணவர்கள், செய்யூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்லும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குறுவட்டம் வாரியாக அடுத்த ஒரு வாரத்திற்கு ஆதார் சேவை முகாம்கள் நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.