/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தெரு நாய்களை கொன்ற மர்ம நபர்கள் மீது வழக்கு தெரு நாய்களை கொன்ற மர்ம நபர்கள் மீது வழக்கு
தெரு நாய்களை கொன்ற மர்ம நபர்கள் மீது வழக்கு
தெரு நாய்களை கொன்ற மர்ம நபர்கள் மீது வழக்கு
தெரு நாய்களை கொன்ற மர்ம நபர்கள் மீது வழக்கு
ADDED : ஜூன் 17, 2024 03:14 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஹேமவித்யா, 43.
இவர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், 12க்கும் மேற்பட்ட, பிறந்து ஒரு வாரமே ஆன தெரு நாய் குட்டிகள் இருந்தன.
சில தினங்களுக்கு முன், இந்த பகுதியில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள், இந்த நாய் குட்டிகளை கோணிப்பைகளில் கடத்திச் சென்று, அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் கொன்று வீசி சென்றுள்ளனர்.
இதே போல, கடந்த மார்ச் மாதமும், இந்த பகுதியில் இருந்த, 20க்கும் மேற்பட்ட நாய்களை, மர்ம நபர்கள் அடித்துக் கொன்றனர்.
நாய்களை துன்புறுத்தி அடித்து கொல்லும் நபர்கள் மீது, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.