/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குழாய் உடைந்து குடிநீர் வீண் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் குழாய் உடைந்து குடிநீர் வீண் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
குழாய் உடைந்து குடிநீர் வீண் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
குழாய் உடைந்து குடிநீர் வீண் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
குழாய் உடைந்து குடிநீர் வீண் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஜூலை 12, 2024 01:42 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளிஉள்ளது.
இந்த பள்ளியின் எதிரே உள்ள நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், தரையில் புதைக்கப்பட்ட குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகி வருகிறது.
இதனால், அப்பகுதியில்செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடும்அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், இந்த சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தேங்கும் தண்ணீரால், பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள்கடும்சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம், குடிநீர் குழாய் உடைப்பு ஆகியவற்றை விரைந்து சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.